Search
  • Follow NativePlanet
Share

சேவாகிராம் - எளிமையும், அமைதியுமாய்!

7

இந்த உலகில் எவரொருவர் அமைதி தரும் பேரின்பத்தை பரிபூரணமாக நுகர விரும்புகிறாரோ, அவர் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் சேவாகிராம் தான். இந்த சிறிய நகரம் மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சேவாகிராம் என்பதற்கு ஹிந்தியில் 'சேவை செய்யும் கிராமம்' என்று அர்த்தம்.  1940-க்கு முன்பு ஷெயகாவ்ன் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம், காந்தியடிகள் இங்கு ஆஸ்ரமம் தொடங்கியபிறகு சேவாகிராம் என பெயர் மாற்றம் பெற்றது. இந்தியாவின் உயரிய விருந்தோம்பல் பண்பிற்கும், மகத்தான சேவை மனப்பான்மைக்கும் நினைவுச் சின்னமாக விளங்கி வருகிறது இந்த சேவாகிராம் நகரம்.

சேவாகிராம் ஆஸ்ரமம் காந்தி அடிகள் பின்பற்றிய வாழ்கை முறையோடு இரண்டறக் கலந்து, அதன் பிரதிபலிப்பாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இங்கு காந்தியடிகளும், அவர் மனைவி கஸ்தூரிபாயும் ஒன்றாக வாழ்ந்த குடிசைகள் பயணிகளின் வரவை எதிர்பார்த்து இன்றும் உறுதியாக நின்றுகொண்டிருக்கிறது.

இந்த குடிசைகள் அனைத்தும் எந்த வித அலங்காரங்களும் இன்றி, இயற்கையான கலைத்துவ தோற்றமும் சிறிதும் இல்லாமல் எளிமையாக காண்போரை பரவசப்படுத்தும். மாறாக இந்த குடிசைகள் ஈரமண் ஓடு, பாய்கள் மற்றும் மூங்கில்களை கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவைகளை பார்க்கும் போது காந்தியடிகள் எவ்வளவு எளிமையான வாழ்கையை வாழ்ந்தார் என்பது எல்லோருக்கும் சுலபமாக விளங்கும். மகாதேவ் குடில், கிஷோர் மற்றும் பர்ச்சுரே குடில்கள் போன்றவை இந்த ஆஸ்ரமத்தில் காணப்படும் பிற குடில்களாகும். இங்கு வரும் ஒவ்வொருவரும் சுதந்திர காலத்துக்கு முன்பு வாழ்வதை போன்ற ஒரு உணர்வை இந்த ஆஸ்ரமம் ஏற்படுத்தும்.

எப்போது சேவாகிராமில் காந்தியடிகள் ஆஸ்ரமம் அமைத்தாரோ அதன் பிறகு இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களிலிருந்து குடி பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லமால் இந்த நகரத்துக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பயணிகள், இந்தியாவின் ஆற்றல் மிக்க மனிதனின் வாழ்வு முறையை அறிந்து கொள்ளும் பேரார்வத்தோடு ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்.

சேவாகிராம் சிறப்பு

சேவாகிராம் வானிலை

சிறந்த காலநிலை சேவாகிராம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சேவாகிராம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
27 Apr,Mon
Return On
28 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
27 Apr,Mon
Check Out
28 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
27 Apr,Mon
Return On
28 Apr,Tue

Near by City