பூச்சிகளுக்கும், வண்ணத்துப்பூச்சிகளுக்காகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் இந்தியாவிலேயே இது ஒன்றுதான். தனிநபரால் நிர்வகிக்கப்படும் இந்த காட்சியகத்தில் பல வகையான பூச்சி இனங்களும், வண்ணத்துப் பூச்சி இனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரியாட்சம்தியா என்ற இடத்தில் நகரத்தில் இருந்து 2கிமீ தொலைவில் இந்த காட்சியகம் அமைந்துள்ளது.
அரிய வகை வண்ணத்துப் பூச்சிகளைக் கொண்ட இங்கு பல நிறங்களின் அவற்றைப் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கிறது. வண்ணத்துப் பூச்சி வளர்ப்பை முதன்முதலில் துவங்கிய பெருமையும் இந்த அருங்காட்சியகத்திற்கு உண்டு. வியாபார நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இடம் இன்று அரிய வகை பூச்சிகளை காக்கும் இடமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications