மாநில அரசால் நடத்தப்படும் இந்த அருங்காட்சியகம் மாநில நூலக வளாகத்தில் அமைந்துள்ளது. மாநில கலை, கலாச்சார மையத்தால் நிர்வகிக்கப்படும் இந்த காட்சியகத்தில் மேகாலயாவின் பூர்வகுடிகளின் வாழ்க்கை முறைகளை விளக்கும் காட்சிகளும், பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
இனம் சார்ந்த கைவினைப் பொருட்கள், இப்பகுதியின் மிருகங்கள், செடிகள் ஆகியவை இங்கு உள்ளன. ஆய்வாளர்கள் இந்த அருங்காட்சியத்தை அதில் இருக்கும் பொருட்களுக்காக பெரிதும் போற்றுகிறார்கள்.
மேகாலயாவின் முதல் முதல்வரை போற்றும் வண்ணம் அவரின் பெயரே இந்த அருங்காட்சியகத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நூலகத்திற்கும் செல்லலாம். இங்கு நேதாஜி, இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications