ஷில்லாங்கின் அழகை இன்னும் பெருமைபடுத்தும் விதமாக இந்த தேவாலயம் அமைந்துள்ளது. பயணிகள் பெரிதும் விரும்பும் இந்த தளத்தில் ஒரே நேரத்தில் 300000 கத்தோலிக்கர்கள் இறைவனை வழிபட முடியும். 14சிலுவைகள் உள்ள இந்த தேவாலயமே சிலுவை வடிவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு புதனும், ஞாயிரும் இங்கு வழிபாடு நடைபெறுகிறது. ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளின் வழிபாடு நடைபெறும் இத்தேவாலயத்தின் நூறாவது ஆண்டுவிழா 1980ல் கொண்டாடப்பட்டது. இங்கு நிலவிய கிறித்த மிசனரிகளின் தாக்கத்தை எடுத்துரைப்பதாக இந்த தேவாலயம் நிற்கிறது.



Click it and Unblock the Notifications