மிகவும் புகழ்பெற்ற தளமாக விளங்கும் இந்த நீர்வீழ்ச்சி நகரத்தில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ளது இந்த பகுதிக்கு செல்பவர்கள் வழியெங்கும் உள்ள அழகிய சாலைகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்தபடியே செல்லலாம்.
கா கஷித் லாய் பதெங் கோஷிவ் என்று உள்ளூர் மக்களால் மூன்றடுக்கு நீர்வீழ்ச்சி என்ற அர்த்தத்தில் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாறை யானை வடிவில் இருப்பதால் இதை எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி என வெள்ளையர்கள் பெயரிட்டார்கள். 1897ல் ஏற்பட்ட கடும் பூகம்பத்தால் இப்பாறையின் ஒரு பகுதி அழிந்துவிட்டது.
பல வகையான செடிகளும், விலங்குகளும் இங்கு உள்ளன. உள்ளூர் பெண்களால் நடத்தப்படும் கடைகளில் பிரத்யேக கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன. உள்ளூர் உடைகளை அணிந்து புகைப்பட எடுத்துக்கொள்ள பயணிகள் விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications