லேடி ஹதரி பூங்கா ஷில்லாங்கின் மிக முக்கியமான சுற்றுலா தளமாகும். பச்சைப் பசேலென்ற புல்வெளியுடன் உள்ள இந்த பூங்காவில் வருடம் முழுதும் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
சிறிய வனவிலங்கு பூங்கா ஒன்றும் உள்ளது. பெரியவர்களும் குழந்தைகளும் இங்கு மிக நன்றாக பராமரிக்கப்பட்டுள்ள புல்தரையில் அமர்ந்து இளைப்பாறலாம்.
ஆங்கிலேயர் காலத்து அசாமின் ஆளுனரின் மனைவியான லேடி ஹய்தரி என்பவரின் பெயரில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய முறையில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் மான், உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன. ரோஜாத் தோட்டத்தில் பலவகையான ரோஜா வகைகள் உள்ளன. பூங்காவிற்கு அருகில் பொது நீச்சல்குளம் ஒன்று உள்ளது.



Click it and Unblock the Notifications