ஷில்லாங் நகரத்தின் உயரமான உச்சி ஷில்லாங் மலை உச்சியாகும். கடல் மட்டத்தில் இருந்து 1966மீ உயரத்தில் உள்ள இதில் இருந்து ஷில்லாங் நகரை பல்முனை கோணங்களில் ரசிக்கலாம்.
நகரத்தில் மிக அதிகமாக பயணிகள் வருகை தரும் தளமும் இதுதான். இங்கிருந்து கலைடோஸ்கோப் வழியாக நகரின் அழகை மக்கள் ரசிக்கிறார்கள்.
இந்த மலையின் பெயரில் இருந்தே இந்நகரம் ஷில்லாங் என பெயர் பெற்றதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உள்ளூர் மக்கள் லெய்ஷெல்லாங் என்ற தங்கள் கடவுளின் பெயரால் இந்நகரம் ஷில்லாங் என வழங்கபப்டுவதாக நம்புகிறார்கள். பல்முனைக்கோண காட்சிகள் மட்டுமல்லாது இந்திய ராணுவத்தின் ராடார் இங்கு அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications