Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷிமோகா » ஈர்க்கும் இடங்கள் » மன்டகட்டே பறவைகள் சரணாலயம்

மன்டகட்டே பறவைகள் சரணாலயம், ஷிமோகா

21

ஷிமோகா மாவட்டத்திற்கு வரும் இயற்கை ரசிகர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடம் இந்த மன்டகட்டே பறவைகள் சரணாலயம் ஆகும்.

துங்கா ஆற்றில் அமைந்துள்ள ஒரு தீவுப்படுகையான இது பலவகையான பறவைகளின் இருப்பிடமாக காட்சியளிக்கிறது. இந்த மன்டகட்டே பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் வழியில் பயணிகள் சக்ரேபைலே யானைப்பயிற்சி முகாம் மற்றும் கஜனூர் அணை ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்யலாம்.

1.14 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த பறவைகள் சரணாலயம் ஒரு அழகான பிக்னிக் ஸ்தலமாகவும் கூடாரத்தங்கலுக்கு ஏற்ற இயற்கைத்தலமாகவும் காட்சியளிக்கிறது.

இந்த சரணாலயத்தில் ஒரு காட்சிக்கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து தொலைநோக்கிகள் மூலம் பலவகையான பறவைகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

இயற்கை மர்றும் பறவைகளை பார்த்து ரசிப்பதற்காக வனத்துறையினர் படகுச்சவாரி வசதிகளையும் இங்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான காலம் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மன்டகட்டே சரணாலயம் ஷிமோகாவிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள சிறுநகரங்களிலிருந்து மன்டகட்டே சரணாலயத்திற்கு பேருந்து சேவைகள் உள்ளன.

மேலும் மாலூர் ரயில் நிலையமும் அருகில் உள்ளது. மங்களூர் விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும். ஷிமோகா அல்லது தீர்த்தஹள்ளி நகரங்களிலிருந்து வாடகை வாகனங்கள் மூலமாகவும் இந்த சரணாலயத்தை அடையலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
06 Jun,Sat
Return On
07 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
06 Jun,Sat
Check Out
07 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
06 Jun,Sat
Return On
07 Jun,Sun