கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த காளி கோயில் ஷோகி நகரத்தின் முக்கிய ஆன்மீக அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. 150 வருடங்கள் பழமையான இக்கோயிலில் சக்தியின் பல்வேறு அவதாரங்களான காளி, ஷியாமளா மற்றும் சண்டி ஆகிய தெய்வங்களை குறிக்கும் சிலைகள் உள்ளன.
இந்த மூன்று தெய்வங்களூமே பெண் சக்தி தெய்வமான துர்க்கையின் அவதாரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாக்காலங்களில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலில் உள்ள தெய்வங்களை பூஜிக்க குழுமுகின்றனர்.



Click it and Unblock the Notifications