ஜீன்மாதா கிராமம் ஜீன்மாதா என்ற பெண் தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் தொன்மை வாய்ந்த கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருப்பதோடு, ராஜபுதன கட்டிடக் கலைக்கு இன்றும் சிறந்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
இங்குள்ள 24 அழகிய தூண்களிலும் செதுக்கப்பட்டிருக்கும் பல்வேறு உருவங்களின் சிற்பங்கள் யாவும் அற்புத கலைப்படைப்புகளாகும். மேலும் இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான ஜீன்மாதாவின் எட்டு கைகளை கொண்ட விக்ரகம் பக்தர்களிடையே மிகவும் பிரபலம்.
அதோடு ஜீன்மாதா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications