சிம்ஹாச்சலம் கிராமத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியாக திகழ்ந்து வரும் கங்காதரா நீரூற்று குன்றொன்றின் உச்சியில் அமைந்திருக்கிறது. இந்த நீரூற்றின் நீரில் மருத்துவ குணங்கள் உள்ளதாக நம்பப்படுவதால் இதில் நீராடுவதற்காக ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்களும், பயணிகளும் சாரை சாரையாய் சிம்ஹாச்சலம் கிராமத்துக்கு வந்து கொண்டே இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கங்காதரா நீரூற்றில் நீராடினால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாக கடந்த சில வருடங்களில் கங்காதரா நீரூற்று மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்களாக மாற்றமடைந்துள்ளன.



Click it and Unblock the Notifications