Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிம்ஹாச்சலம் » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயில்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயில், சிம்ஹாச்சலம்

10

இந்தியாவில் திருப்பதி கோயிலுக்கு பிறகு இரண்டாவது பணக்கார கோயிலாக சிம்ஹாச்சலத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயில் கருதப்படுகிறது. இந்தக் கோயில் ஒரிய மற்றும் திராவிடிய கட்டிடக் கலைகளின் கலவையில் கட்டப்பட்டுள்ளது.

இந்து புராணத்தின்படி விஷ்ணு பகவானின் தீவிர பக்தனான பக்த பிரகலாதனை அவனுடைய கொடிய தந்தையிடமிருந்து காக்கும் பொருட்டு விஷ்ணு பகவான் நரசிம்ஹராக அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதாவது பிரகலாதனின் தந்தை இரணியகசிபு தன்னை மனிதனோ அல்லது மிருகமோ கொள்ள முடியாதவாறும், தன்னுயிர் அந்தரத்திலோ, பூமியிலோ  போக முடியாதவாறும் வரம் பெற்றிருந்தான்.

எனவே அந்த கொடிய அரக்கனை வதம் செய்வதற்காக பாதி மனிதன் உருவத்திலும், பாதி  சிங்க ரூபத்திலும் அவதாரம் எடுத்த விஷ்ணு பகவான் தன்னுடைய மடியில் கிடத்தி இரணியகசிபுவின் குடலை கிழித்தெடுத்து அவனை வதம் செய்தார்.

இந்த லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயில் விஷ்ணுவின் இந்த  நரசிம்ஹ அவதாரத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். அதோடு சிம்ஹாச்சலம் கிராமம் நரசிம்ஹ மூர்த்திக்காக அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள  கோயில்கள் உள்ள 18 புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகும்.

மேற்கூறிய புராணக் கதையை போன்றே மற்றொரு சுவையான புராணச் செய்தியும் இப்பகுதிகளில் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது சிம்ஹாச்சலத்தில் கொள்ளயடிப்பதற்காக புகுந்த சில இஸ்லாமிய கொள்ளையர்கள் லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயிலை அழிக்க முற்பட்டனர்.

ஆனால் கிராம மக்களையும், கோயிலையும் கொள்ளையர்களிடமிருந்து காத்தருளுமாறு குமாரநாதன் எனும் புலவர் நரசிம்ஹ மூர்த்தியிடம் பிராத்தித்தார்.  அவர் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டும், மக்களை காப்பதற்காகவும் நரசிம்ஹர் குளவிக் கூட்டத்தை கொள்ளையர்கள் மீது ஏவிவிட்டு அவர்களை விரட்டியடித்தார்.

இது போன்ற புராணச் சிறப்புகள் கொண்ட கோயிலாகவும், அதே வேளையில் கட்டிடக் கலை நேர்த்தியும் கொண்ட லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயிலை தேடி எந்நேரமும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது.

 

 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
06 Sep,Sun
Return On
07 Sep,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
06 Sep,Sun
Check Out
07 Sep,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
06 Sep,Sun
Return On
07 Sep,Mon