சிந்துதுர்க் பகுதியில் மற்றும் ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சம் இந்த கார்லி நீர்த்தேக்கம் (ஆற்று முகத்துவாரம்)ஆகும். உண்மையில் கேரளாவிலுள்ள முகத்துவார நீர்த்தேக்கங்கள்தான் மிக அழகு என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால் ஒரு முறை கண்டிப்பாக சிந்துதுர்க் பகுதிக்கு வந்து இந்த கார்லி முகத்துவார நீர்த்தேக்கத்தையும் ஒரு முறை பார்ப்பது அவசியம்.
கார்லி ஆற்றில் படகு சவாரி செல்வதன் மூலம் இந்த முகத்துவார நீர்த்தேக்க பகுதியின் எழிலை கண்டு ரசிக்கலாம். ஆறு கடலை சேரும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதை உணரலாம். ஆற்றின் இரு புறமும் உயர்ந்தோங்கிய காடுகளும் ஆற்றின் ஓட்டமும் நமக்கு ஒப்பற்ற அமேசான் காடுகளை பார்ப்பது போன்ற அனுபவத்தினை தருகின்றன.



Click it and Unblock the Notifications