சிர்பூர் நகரம் இங்குள்ள புத்த விஹாரங்களுக்கு வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது. இவற்றில், ஆனந்த் பிரபு குடி விஹார் எனும் மடாலயம் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இந்த புத்த விஹாரம் புத்தரின் தீவிர பக்தரான ஆனந்த் பிரபு பிக்ஷு என்பவரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்த விஹாரத்தில் 14 அறைகள் மற்றும் ஒரு பிரதான வாசல் ஆகியவை அமைந்திருக்கின்றன. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பல கற்தூண்களையும் இதன் உள்ளே பார்க்கலாம். 6 அடி உயர புத்தர் சிலை இந்த விஹாரத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கிறது.
ஆனந்த் பிரபு குடி விஹாருக்கு அருகிலேயே லக்ஷ்மணா கோயில், துர்துரியா மற்றும் கந்தேஷ்வர் கோயில் போன்ற இதர முக்கியமான அம்சங்களும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications