Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலன் » ஈர்க்கும் இடங்கள் » மாஜாதல் சரணாலயம்

மாஜாதல் சரணாலயம், சோலன்

11

மாஜாதல் சரணாலயம் சோலன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பிரபலமான வனவிலங்கு சரணாலயம். 55,670 சதுர கி.மீ பரப்பளவை உடைய இந்த வனவிலங்கு சரணாலயம் 1962 ஆம் ஆண்டு முதன்முதலில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 1974 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச அரசாங்கம் இதை சரணாலயமாக அங்கீகாரம் செய்தது.

இந்த சரணாலயம் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கின்றது. அதிலும் குறிப்பாக கோரல்கள் மற்றும் சியர் பீசண்டுகளுக்கே இச்சரணாலயம் அதிக பிரசித்தி பெற்றது.

கோரல் என்பது  உருளையான கொம்புகளை உடைய ஆடு போன்ற ஒரு சிறிய விலங்குகினம். சியர் பீசண்ட் என்பது நீண்ட வாள் உடைய ஒருவகை பறவை.

மேலும் வேங்கை, இமாலய கருப்புநிறக் கரடி, குரைக்கும் மான், இமாலய பனைமர புணுகுப்பூனை, காட்டுப்பூனை, மஞ்சல் கழுத்து கீரி, இந்திய காட்டு கரடி, நீண்ட வால் குரங்கு ஆகியவை இங்கு காணக்கூடிய மற்ற விலங்குகளில் சில.

ப்ளேக் ஃப்ரேங்கொலின் மற்றும் ஓரியண்டல் வெள்ளை முதுகு கொண்ட பருந்து ஆகியவற்றையும் இந்த சரணாலயத்தில் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

பயணிகள் சிம்லா-பிலாஸ்பூர் சாலை வழியாக இந்த சரணாலயத்தை அடையலாம். இவ்விடத்திற்கு நேரடி போக்குவரத்து இல்லாததால், சுற்றுலாப்பயணிகள் சிம்லா-பிலாஸ்பூர் சாலையில் இருக்கும் கேஷ்லாகில் நிறுத்தி, அங்கிருந்து சரணாலயத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.

இந்த சரணாலயத்தை பார்வையிட குளிர்காலமே சிறந்ததாக கருதப்படுகின்றது. காட்டு வீடுகளின் வடிவத்தில் இங்கே தங்கும் விடுதிகள் கிடைக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Mon
Check Out
21 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue