Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ஆசர் மஹால்

ஆசர் மஹால், சோலாப்பூர்

31

ஆசர் மஹால் என்று அழைக்கபடும் இந்த வரலாற்று சின்னம் (கட்டிடம்) அப்போதைய அரசாட்சியின் நீதி மண்டபமாக திகழ்ந்துள்ளது. முகமது அடில் ஷா மன்னரின் மேற்பார்வையில் இது 1646ம் ஆண்டு எழுப்ப ப்பட்டுள்ளது.

இந்த நினைவுச்சின்னம் மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை தாங்கி நிற்பது குறிப்பிட த்தக்கது.நீதி மண்டபமாக மட்டுமன்றி இறைத்தூதர் முகமதுவின் தாடி ரோமங்கள் புனிதப்பொருளாக இங்கு பாதுகாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியும் நுட்பமான கலை அம்ச வேலைப்பாடுகளை கொண்டுள்ளது. இந்த மண்டபத்தின் மேல் தளத்தில் அற்புதாமான ஃபிரஸ்கோ ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டபத்தில் வருடா வருடம் ‘உர்ஸ்’ திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த மண்டபத்தின் முன் பகுதியில் ஒரு சதுர வடிவ குளம் காணப்படுகிறது. இங்கு அரச குடும்ப பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த்தாக சொல்லப்படுகிறது. இங்குள்ள மூன்று குளங்களில் இது பெரிதாகவும் 15 அடி ஆழத்துடனும் காணப்படுகிறது. மற்ற இரண்டு குளங்கள் அளவிலும் ஆழத்திலும் சிறிதாக காணப்படுகின்றன.

இந்த வரலாற்று சின்னத்தின் பின் பகுதியில்  பார்த்தால் ஒரு பழைய மசூதியின் இடிபாட்டு மிச்சங்களைக் காணலாம். அழகிய வேலைப்பாடுடன் கூடிய வாயிற்பகுதி இந்த மசூதியில் காணப்படுகிறது.

குறிப்புகள் காணப்படும் பல கல்வெட்டுக்கற்கள் இங்கு காணப்படுகின்றன. ஆசர் மஹால் தற்சமயம் இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப் படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri