Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » கோல் கும்பத்

கோல் கும்பத், சோலாப்பூர்

31

சோலாப்பூர் நகரத்திலிருந்து 100 கி.மீ தூரத்தில் பீஜாப்பூரின் ஒரு பகுதியாக இந்த கோல் கும்பத் (அல்லது கோல் கும்பஸ்) அமைந்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய கலைப்பெருமையை பிரதிபலிக்கும் இதன் கட்டிடக்கலை அம்சத்துக்காக இது இந்தியாவிலேயே அதி முக்கியமான பிரசித்தி பெற்ற ஒரு வரலாற்று கலைச்சின்னமாக அறியப்படுகிறது.

கோல் கும்பத் என்ற பெயருக்கு ரோஜாக் கோபுரம் (குமிழ் கோபுரம்) என்பது பொருளாகும். ரோஜா மற்றும் தாமரை மலர் இதழ்கள் விரிந்தது போன்ற விதானக்கட்டமைப்பினை இந்த குமிழ் கோபுரம் பெற்றுள்ளதால் ரோஜாக்கோபுரம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் இந்த கலைச்சின்னம் பீஜாப்பூர் சுல்தான் மொஹம்மது அடில் ஷாவின் சமாதி மண்டபமாகும். 1656ல் காபூலைச் சேர்ந்த யாக்கத் எனும் அக்காலத்திய கீர்த்தி பெற்ற கட்டிடக்கலை நிபுணரால் இது உருவாக்கப்பட்டுள்ளது.

18000 சதுர அடிப்பரப்பில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட கலைச்சின்னத்தின் உள் ‘குவி விதான அமைப்பு’ உலகின் தலைசிறந்த உள்விதான வடிவமைப்புகளில் ஒன்றாகும்.

இந்த மண்டப குவி விதானத்தின் மேல்மாடப்பகுதி அதிநுட்பமான ஒலியியல் தன்மையுடன் கட்டப்பட்டு‘ஒலிமாடம் (whispering gallery) என்று அழைக்கப்படுகிறது. இந்த மாடப்பகுதியில் எழுப்பப்படும் எந்த ஒரு சிறு சத்தமும் அதன் எதிர்ப்பகுதிகளில் துல்லியமாக எதிரொலிக்கப்படுகிறது. அது மட்டுமன்றி பல நுட்பமான கட்டிடக்கலை அம்சங்களின் உன்னத வடிவமைப்பாக இந்த குவிவிதானம் காட்சியளிக்கிறது.

பார்ப்பதற்கு எளிமையாக அதே சமயம் வரலாற்று காலத்தின் கட்ட்டக்கலை மஹோன்னதத்தை பறை சாற்றும் இந்த கும்பத் சின்னம் ‘தக்காண கட்டிடக்கலையின் உச்சம் ‘ என்று அழைக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri