Search
  • Follow NativePlanet
Share

பீஜாப்பூர் - உன்னத பாரம்பரியத்தின் பதிவுகள்

40

ஒரு உன்னதமான பொற்காலத்தின் வாழும் மௌன சாட்சிதான் இந்த வரலாற்று மணம் கமழும் பீஜாப்பூர் நகரம்.  இந்த நகரத்தின் எண்ணற்ற வரலாறு மற்றும் கட்டிடக்கலைச் சின்னங்கள் ஒரு காலத்தில் மேன்மையான பாரம்பரியத்தையும் நாகரிகத்தையும் பெற்றிருந்த ஒரு நகரத்தின் பெருமையை மௌனமாக பயணிகளுக்கு எடுத்துச்சொல்கின்றன.

பெங்களூர் நகரத்திலிருந்து 521 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த பீஜாப்பூர் நகரத்தின் அழகானது காலத்தின் கொடிய கரங்களால் சிதைவுற்றிருந்தாலும் இன்னமும் மிச்சமிருக்கும் அதன் மசூதிகளும், தூண் கோபுரங்களும், கோட்டைகளும் ஒரு மஹோன்னத வரலாற்றுக்காலத்துக்கு சான்றாய் விளங்குகின்றன.

பிரதேச வரலாறும் இதர தகவல்களும்

பீஜாப்பூரின் வரலாற்றுப் பின்னணியை ஆராயும்போது இதன் மஹோன்னத பாரம்பரியத்துக்கு அடில் ஷா வம்சம் காரணமாக இருந்துள்ளது தெரிய வருகிறது. 1490 ம் ஆண்டில் யூசஃப் அடில் ஷா’வால் ஒரு புதிய தனி நகரமாக உருவாக்கப்பட்ட பீஜாப்பூர் அவருக்குப்பின் வந்த அரசர்களால் மேன்மேலும் பல்விதமான கட்டிடக்கலை அம்சங்களாலும் கோட்டைகளாலும் மெருகேற்றப்பட்டது.

பீஜாப்பூர் என்றவுடனேயே இங்குள்ள கோல் கும்பாஸ் நினைவுச்சின்னத்தைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அடில் ஷா மன்னரின் சமாதி மண்டபமான இதன் உள்ளே செயிண்ட் பீட்டர் பஸிலிகாவுக்கு அடுத்து மிகப்பெரியதாக புகழ் பெற்றுள்ள குமிழ் விதானம் (அரைக்கோள கோபுரக்கூரை வடிவம்) அமைந்துள்ளது. 

அதைத்தவிர்த்து இதர வரலாற்றுச் சின்னங்களாக மாலிக்-இ-மைதான் எனப்படும் உலகிலேயே பெரிய வரலாற்றுக்கால பீரங்கி மற்றும் உப்லி புருஜ் எனப்படும் உயர்ந்த கோபுரம் போன்றவை இங்குள்ளன. மன்னர்களால் வரலாற்றுக்காலத்தில் உருவாக்கப்பட்ட சந்த் பாவ்டி என்றழைக்கப்படும்  மிகப்பெரிய தடாகக் குளமும் இங்குள்ளது. இது 200 லட்சம் லிட்டர் (நீர்) கொள்ளளவு கொண்டதாகும்.

ஒரு புராதனக்கொத்தளத்தின் இடிபாடுகள் மற்றும் ஒரு கோட்டை, சமாதிகள், மசூதிகள் போன்ற இதர கட்டமைப்புகளைக் கொண்டுள்ள புறநகரம் போன்றவை பீஜாப்பூரில் வரலாற்றின் மிச்சங்களாக காணக்கிடைக்கின்றன.

பீஜாப்பூருக்கு அருகிலேயே அமைந்துள்ள ஏஹோல், பட்டாடக்கல் மற்றும் படாமா போன்ற இதர முக்கிய ஸ்தலங்களில் உள்ள உன்னதமான சாளுக்கிய கோயில்களும் பீஜாப்பூரிலுள்ள முகலாய கலை அம்சங்களும் அருகருகே அமைந்திருப்பது வியப்புக்குரியது. வரலாற்றுக்கால இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

பீஜாப்பூர் இந்தியாவின் எல்லாப்பகுதிகளுடனும் நன்கு போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பெல்காம் நகரில் விமான நிலையம் உள்ளது. கோவா மற்றும் பெங்களூரிலிருந்து ரயில் சேவைகள் உள்ளன.

பீஜாப்பூர் சிறப்பு

பீஜாப்பூர் வானிலை

சிறந்த காலநிலை பீஜாப்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பீஜாப்பூர்

  • சாலை வழியாக
    ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலம் என்பதால் பீஜாப்பூர் அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களுடனும் அதிகமான சாலைப்போக்குவரத்து வசதிகளைக்கொண்டுள்ளது. பல்வகையான வசதிகள் கொண்ட (வால்வோ, ஸ்லீப்பர், ஏ.சி, எக்ஸிகியூட்டிவ் போன்ற) தனியார் பேருந்துகளும் அரசு KSRTC பேருந்துகளும் அருகிலுள்ள முக்கிய பெருநகரங்களான் புனே, பெங்களூர், மும்பை போன்றவற்றிலிருந்து பீஜாப்பூர் நகருக்கு இயக்கப்படுகின்றன. பீஜாப்பூரை அடைந்தபின் பயணிகள் அங்கிருந்து டாக்ஸிகள் மூலம் கோல் கும்பாஸ், இப்ராஹீம் ரௌஸா, ஜும்மா மஸ்ஜித் மற்றும் மாலிக்-இ-மைதான் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்யலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பீஜாப்பூர் ரயில் நிலையம் பீஜாப்பூர் நகர மையத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூர், மும்பை, ஹைதராபாத், ஹூப்ளி மற்றும் இதர நகரங்களுடன் நல்ல முறையில் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பெல்காம் விமான நிலையம் மூலமாக பீஜாப்பூர் நகரம் இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களுடன் விமான சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இது பீஜாப்பூரிலிருந்து 197 கி.மீ தூரத்தில் உள்ளது. இது தவிர 538 கி.மீ தூரத்தில் பெங்களூர் விமான நிலையமும் அமைந்துள்ளது. இது ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு வசதியாக உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat