சோனமார்க் பகுதியில் ஏராளமான கணவாய்களும் அமைந்துள்ளன. மிகவும் ஆபத்தானவைகளாக இருக்கும் இந்த கணவாய்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன. குறிப்பாக இங்கு அமைந்திருக்கும் கிருஷ்ணசர் கணவாய் கடல் மட்டத்திலிருந்து 4080 மீ உயரத்தில் இருக்கிறது.
கத்சர் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் இந்த பகுதி பொட்டானிஸ்ட் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதி கத்சர் ஏரி மற்றும் பள்ளத்தாக்கு, மலைகள் மற்றும் விஷன்சர் ஏரி போன்றவற்றால் சூழப்பட்டுள்ளதால், இது இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications