ஸ்ரீ நகரின் மலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அன்சார் ஏரி அங்கே கட்டப்பட்டுள்ள சட்டத்திற்குப் புறம்பான கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் இறந்த ஏரியாகவே மாறிக் கொண்டிருக்கிறது. முன்பு தால் ஏரியுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த ஏரியும் ஒரு புகழ் பெற்ற சுற்றுலா தலம் தான்.
மிகவும் வேகமாக அதிகரித்த சுற்றுச்சூழல் மாசுபாடுகள், தண்ணீரின் உப்புத் தன்மை ஆகியவை இந்த ஏரியில் மிதந்து செல்வதையும், தாவரங்கள் மற்றும் பூக்கள் வளர்வதற்கும் ஒவ்வாத சூழலை ஏற்படுத்திவிட்டன.
எனினும், அன்சார் ஏரி பறவைகளை கவனித்திருப்பதற்கு மிகவும் ஏற்ற ஏரியாக உள்ளது. இந்த ஏரியின் முனைகளில் இருக்கும் ஷிக்காரா படகுகளில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்திடவும் முடியும். குளிர்காலங்களில் போச்சார்டு, மல்லார்டு, காட்வால் ஸ்னைப் மற்றும் டீல் ஆகிய நீர்ப் பறவைகளை இந்த ஏரியில் காண முடியும்.



Click it and Unblock the Notifications