தால் ஏரி, ஸ்ரீநகர்

'காஷ்மீரின் கிரீடத்தில் உள்ள ஆபரணம்' அல்லது 'ஸ்ரீ நகரின் அணிகலன்' என்று அழைக்கப்படும் தால் ஏரி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.

26 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கண் கவரும் ஏரி, ஸ்ரீ நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான மற்றும் முதன்மையான சுற்றுலா தலமாகும்.

மாபெரும் இமயமலையை பின்னணியாகக் கொண்டிருக்கும் இந்த ஏரி 'ஷிக்காரா' அல்லது மரப் படகுகளுக்காக மிகவும் புகழ் பெற்றுள்ளது. இங்கிருக்கும் படகு வீடுகள் தால் ஏரியைச் சுற்றிப் பார்த்திடவும், ஷிக்காரா படகுகள் தால் ஏரியிலிருந்து படகு வீடுகளுக்கு ஃபெர்ரி வகை பயணங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தால் ஏரியானது, லோகுட் தால், காக்ரிபல், போட் தால் மற்றும் நகீன் என்று நான்கு நீர்பிடிப்பு பகுதிகளாக இடைப்பட்ட கற்பாலங்களால் பிரிக்கப்பட்டுள்ளது.

இணையில்லாப் இயற்கைப் பேரழகும் மற்றும் கண்கவரும் சுற்றுச்சூழலும் தால் ஏரியை சுற்றுலாப் பயணிகள் விரும்பும் முதன்மையான சுற்றுலாதலமாக வைத்திருக்கின்றன.

படகு வீடுகளிலும், ஷிக்காரா படகுகளிலும் சவாரி செய்திடும் வேளைகளில் சுற்றுலாப் பயணிகள் அழகான சூரிய அஸ்தமனத்தை காண முடியும். இங்கு நடத்தப்படும் நீர் விளையாட்டுகளிலும் சுற்றுலாப் பயணிகள் பங்கெடுத்து களிப்படைய முடியும். நீச்சல் போட்டிகள், நீர் சறுக்குதல், கயக்கு, ஆங்க்லிங் மற்றும் கேனோயிங் ஆகியவை தால் ஏரியில் வழங்கப்படும் புகழ் பெற்ற நீர் விளையாட்டுக்களாகும்.

Please Wait while comments are loading...