ஸ்ரீ நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள சரார்-இ-ஷரிப், ஹஸ்ரத் ஷேக் நூர்-உத்-தின்-வாலி என்ற பெயரில் பிரபலமாக உள்ள இடமாகும். முஸ்லிம் சூஃபி ஞானியான ஹஸ்ரத் ஷேக் நூர்-உத்-தின்-வாலியின் நினைவாகவே சுமார் 600 ஆண்டுகளுக்கும் முன்னர் இந்த இடம் கட்டபட்டது.
1377-ம் ஆண்டு சலார் சன்ஸ் என்ற பெண்ணிற்கு பிறந்த ஹஸ்ரத் ஷேக் நூர்-உத்-தின்-வாலி இளமையில் நுந்த ரேஷி அல்லது சஹஸானந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார்.
இவர் பிறந்து 3 நாட்களுக்குப் பின்னர் தாய்ப்பாலை உண்ண மறுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர், யோகினி என்ற பெயரில் அறியப்பட்ட லால் டெட் என்ற பெண் துறவியின் பாலை இவர் ஏற்றுக்கொண்டு, அவருடைய புனித வாரிசாக தன்னை அறிவித்துக் கொண்டார்.
இந்த பள்ளத்தாக்கில் 'ரிஷியிசத்தை' (Rishism) முதலில் அறிமுகம் செய்தவர் ஹஸ்ரத் ஷேக் தான். அஹிம்சை, புலால் உண்ணாமை, பொறுமை மற்றும் மத ஒருமைப்பாடு ஆகியவற்றை இவர் பரப்பி வந்தார்.
ஆலம்தர்-இ-காஷ்மீர், சர்கெல்-இ-ரிஷியா மற்றும் ஷேக் நூர்-உத்-தின் நூரானி என்ற பெயர்களால் இவரைப் பின்பற்றி வந்தார்கள். ஹஸ்ரத் ஷேக் தத்துவம் மற்றும் கவிதைகளுக்கும் சில பங்களிப்புகளை செய்துள்ளார்.
1438-ம் ஆண்டு அவர் இறந்த போது, இரண்டே நாட்களில் சுமார் 9 இலட்சம் பேர் இந்த தலத்தில் ஒன்று கூடினார்கள். இவருடைய உடல் சரார்-இ-ஷரிப்-ல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.
பல்வேறு காலகட்டங்களில் அழிக்கப்பட்டிருந்தாலும், இந்த வழிபாட்டுத்தலம் அதன் மத முக்கியத்துவத்தினால் இன்றும் நிமிர்ந்து நின்று கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications