1857-ம் ஆண்டு கட்டப்பட்ட இமம்பாரா ஹாஸ்ஸனாபாத் ஸ்ரீ நகரில் உள்ள இரண்டாவது பழமையான வழிபாட்டுத்தலம் ஆகும். இலட்சக்கணக்கான முஸ்லீம்கள் இந்த தலத்திற்கு ஒவ்வொரு வருடமும் வந்து செல்கிறார்கள்.
ஸ்ரீ நகரின் தென் மேற்கு பகுதியில் உள்ள இந்த வழிபாட்டுத்தலம், சாட்டி பத்ஷாஹி குருத்துவாரா, ஹஸ்ரட்பல் மசூதி மற்றும் மா சாரதா தேவி கோவில் ஆகிய மூன்று புனிதத்தலங்களுக்கும் நடுவில் அமைந்துள்ளது.
எட்டு பக்கங்களைக் கொண்டதாக கட்டப்பட்டிருக்கும் இமம்பாரா ஹாஸ்ஸனாபாத் இந்தோ-ஈரானிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் அற்புத கட்டிடமாகும். இந்த வழிபாட்டுத்தலத்தின் நுழைவாயில்களில் சுமார் ஐந்து நுழைவாயில்கள் பெண்களுக்காகவே ஒதுக்கப் பட்டுள்ளது.
பாபா மஸார் என்ற முகலாய கல்லறைகளும் இந்த தலத்திற்கு மிகவும் அருகிலேயே உள்ளன. பாபா அலி, ஹப் சாஹேப் முல்லா; புகழ் பெற்ற காஷ்மீரி கவிஞர் மர்சியா மற்றும் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெர்சிய கவிஞர் சையது மிர்ஸா ஷா ஆகியோர் இந்த கல்லறைகளில் துயில் கொள்ளும் காஷ்மீரத்தின் புகழ் பெற்ற தலைவர்களாவர்.



Click it and Unblock the Notifications