தால் ஏரிக்கருகில் ஸபர்வான் மலைச்சிகரங்களில் உள்ள இந்திரா காந்தி துலிப் தோட்டம் ஸ்ரீ நகரிலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் ஒரு வார பண்டிகையான துலிப் திருவிழாவிற்காக இந்த இடம் மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.
சுமார் 70 விதமான வேறு வேறு வகை வண்ண துலிப் மலர்களையும், ஸ்ரீ நகரின் பிற எண்ணற்ற தோட்டங்களில் இருக்கும் மலர்களையும் கொண்டதாக இந்த தோட்டம் விளங்குகிறது.
சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த தோட்டத்தில் பூக்களுக்கான பருவத்தில் ஒரே சமயத்தில் 1.3 மில்லியன் துலிப் பூ மொட்டுக்கள் பூக்கும் என்று சொல்லப் படுகிறது.
இத்தோட்டம் ஷாலிமார் தோட்டம், சஸ்ம்-இ-ஷாஹி, நிஷாத் தோட்டம் மற்றும் பிற முகலாய தோட்டங்களுக்கு மிகவும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ.50/- ம், சிறார்களுக்கு ரூ.20/- ம் வசூலிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications