குன்டிலான் (Quntilon) என்ற பெயரில் பிரபலமாக உள்ள பாரி மஹால், ஸ்ரீ நகரின் சஸ்ம்-இ-ஷாஹி தோட்டங்களுக்கு மேலே அமைந்துள்ள இடமாகும். புகழ் பெற்ற முகலாய பேரரசரான ஷ ஜகானின் மூத்த புதல்வரானா தாரா ஷிகோவினால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இடம் தான் பாரி மஹால்.
தன்னுடைய சூஃபி ஆசிரியர் முல்லா ஷா படாக்ஷியின் நினைவாக தாரா ஷிகோ, ஒரு அழிந்த புத்த மடாலயத்தின் மீது இந்த இடத்தைக் கட்டினார். ஜோதிடம் மற்றும் வானியல்கலைகளைப் பயிற்றுவிக்கும் கல்வி மையமாகவும் பாரி மஹால் விளங்கி வந்தது. இந்த தோட்டத்தின் முழுமையான நீளம் மற்றும் அகலங்கள் முறையே 122 மீ மற்றும் 62.5 மீ ஆகும்.
தால் ஏரிக்கு தென்மேற்காக அமைந்திருக்கும் இந்த தோட்டம் 6 தளங்களைக் கொண்டிருக்கிறது. பிற முகலாய தோட்டங்களில் உள்ளதைப் போல அருவிகள் எதுவும் பாரி மஹாலில் இல்லை.
இதன் தளங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டிகளுக்கு பூமிக்கு அடியில் செல்லும் குழாய்களில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த தோட்டத்தில் ஒரு நீரூற்றும், பழங்கள் மற்றும் பூக்களைத் தாய்கிய புல்வெளிப் பரப்புகளும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications