பிரபலமான இஸ்லாமிய துறவியாக இருந்த மதின் சாஹிப் என்பவரின் நினைவாகவே இந்த மதின் சாஹிப் கல்லறை கட்டப்பட்டது. ஸ்ரீ நகரின் அழகிய கல்லறைகளில் ஒன்றான இது ஸதிபல்-லில் உள்ள மதின் சாஹிப் மசூதிக்கு வடக்காக இது அமைந்துள்ளது.
இதன் வெளிப்புற சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடி போன்ற டைல்ஸ்கள் மற்றும் இதன் மனதை மயக்கும் கட்டுமான அமைப்பு ஆகியவை 15-ம் நூற்றாண்டின் உன்னதமான கட்டிடக்கலைத் திறமையை பறைசாற்றுவதாக இருக்கும்.
இந்த மசூதியின் சுவர்களில் உள்ள எழுத்துருக்குள் அந்த காலகட்டத்தின் கட்டுமானக்கலையை நினைவுபடுத்துவதாக இருக்கும். சிறுத்தையின் உருவம் ஒன்றும் இந்த மசூதியின் நுழைவாயிலில் செதுக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீரின் பிற கட்டிடங்களில் காணப்படும் கட்டுமான அமைப்புகளையே இந்த மசூதியின் வளைந்த கதவுகளிலும் காணப்படுகின்றன. மதின் சாஹிப்பை பின்பற்றுபவர்களில் பெரும்பாலோனவர்கள் இந்த இடத்திற்கு வந்து தங்களுடைய பிரார்த்தனைகளை செய்து செல்வார்கள்.



Click it and Unblock the Notifications