காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உல்லர் ஏரி இந்தியாவிலேய மிகப்பெரிய நன்னீர் ஏரியாகவும், ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகவும் உள்ளது.
உண்மையில் மஹாபத்மா சார் என்று அழைக்கப்படும் இந்த ஏரியானது புகழ் பெற்ற நல் சரோவர் பறவைகள் சரணாலயத்திற்கு அருகிலேயே இயற்கையான நீர்த்தேக்கமாக அமைந்துள்ளது.
பல்வேறு பறவைகள் மற்றும் மீன்களின் தாயகமாக உள்ள இந்த ஏரிக்கு ஜீலம் நதியிலிருந்து தண்ணீர் கிடைக்கிறது. பருவநிலையைப் பொறுத்து உல்லர் ஏரியின் பரப்பளவு 30 ச.கிமீ முதல் 260 ச.கிமீ வரை மாறி மாறி இருக்கும்.
சாதாரணமாக கணாப்படும் கெண்டை மீன்கள், ரோஸி பார்ப், மஸ்கிட்டோ பிஷ், நெமாசெய்லஸ் பிராணிகள், க்ராஸ்ஸோசெலியஸ் லாட்டியஸ் மற்றும் பல்வேறு வகையிலான நன்னீர் மீன்கள் ஆகியவற்றை இந்த ஏரியில் பார்க்க முடியும்.
இந்த ஏரியிலிருக்கும் மீன்கள் தான், இந்த பகுதியை சுற்றி உள்ள மக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்றாக இருப்பதால் சுமார் 8000 மீனவர்கள் இந்த ஏரியை நம்பி இருக்கின்றனர்.
ஃப்ளூ ராக் புறாக்கள், கோல்டன் ஓரியோல், அல்பைன் ஸ்விப்ட், குருவி பருந்துகள் மற்றும் குறுகிய காலுள்ள கழுகுகள் ஆகியவை இந்த ஏரியில் காணப்படும் பிரபலமான பறவையினங்களாகும்.
இந்த ஏரியின் மையத்தில் பேரரசர் ஜைனுல்லாபிதின் உருவாக்கிய பழைய தீவின் சிதைவுகளை காண முடிகிறது. போஹ்ரு, எரின், ஹர்பூஜி மற்றும் ஆரா ஆகிய ஓடைகள் இந்த ஏர்pயில் கலக்கும் முக்கியமான ஊற்றுகளாகும். இந்த ஏரிக்கு வருகை தர மிகவும் சிறந்த காலமாக ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலத்தைச் சொல்லலாம்.



Click it and Unblock the Notifications