பயணிகள் நேரமிருந்தால் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் சிருங்கேரியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள கிக்கா கிராமம் ஆகும். எழில் கொஞ்சும் இயற்கைக்காட்சிகளுக்கு புகழ் பெற்ற இந்த கிராமத்தில் நரசிம்ம பர்வத மலை உச்சி வரை செல்லும் நடைப்பாதையும் காணப்படுகிறது.
ரிஷ்யசிருங்க முனிவரின் பெயரில் ஒரு புராதனக்கோயிலும் கிக்காவில் உள்ளது. இந்த கோயில் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டிருப்பது விசேஷம். 4 -5 அடி உயரமுள்ள சிவலிங்கம் இங்கு கொம்புடன் தரிசிக்கக் கிடைக்கிறது.
மேலும் பாறையேற்றம், நடைப்பயணம், மலையேற்றம் மற்றும் கூடாரவாசம் போன்ற பல சுற்றுலா அம்சங்களை கிக்காவில் கிடைக்கின்றன. சிறிமனே அருவி மற்றும் ரிஷி வசிஷ்டர் ஆசிரமம் இரண்டும் கிக்காவில் சுற்றுல்லாப்பயணிகள் காண வேண்டிய இதர முக்கிய இடங்களாகும்.



Click it and Unblock the Notifications