சூரத் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில், பூர்ணா நதிக்கரையில் அமைந்துள்ள நவ்சாரி, தற்பொழுது ஒரு முக்கியமான வணிக மையமாக உள்ளது. கி.பி.1142-ல் உருவான பார்ஸி குடியேற்றங்களுக்காக புகழ் பெற்ற இடமாக நவ்சாரி உள்ளது.
நெருப்பு கோவில் அல்லது அடாஷ் பெஹ்ராம் மற்றும் பிற சிறிய அகியாரிகள், பார்ஸ்வநாத் ஜெயின் கோவில், சையத் சாதாத் கி தர்ஹா ஆகியவை நவ்சாரியில் காண வேண்டிய முக்கியமான இடங்களாகும்.
டாடா குழுமத்தின் நிறுவனராகவும் மற்றும் இந்திய இரும்பு எஃகு தொழிலின் முன்னோடியாகவும் விளங்கிய ஜாம்ஷெட்பூர்ஜி டாடாவும் நவ்சாரி பகுதியைச் சேர்ந்தவரே. இவருடைய இல்லம் இன்று ஒரு நினைவகமாக நன்றாக பாதுகாத்து வரப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications