Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» சூரியனார் கோவில்

சூரியனார் கோவில் - சூரிய கடவுளின் நவக்கிரக திருத்தலம்!

3

சூரியனார் கோவில் கிராமம் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவசூரியநாராயண கோவில் காரணமாக இந்த கிராமம் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறது. சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை இந்தக் கோயில் பெற்றுள்ளது. ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.  இங்கு வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.

சிவசூரியநாராயண கோயிலின் கட்டிடக்கலையும்! வரலாறும்!

மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவசூரியநாராயண கோவில், கிரகங்களின் கதிர்களை உட்கொள்ளும் தன்மை கொண்டது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.

இதன்  கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது. இக்கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.

சூரியனார் கோவிலை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

திருமங்கலக்குடியில் உள்ள பிராண நாதேஸ்வரர் கோவிலும், கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் சுவாமி கோவிலும்(சுக்கிரனுக்கு உகந்த நவக்கிரக கோவில்) சூரியனார் கோவிலுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கக் கூடிய பிரசித்தி பெற்ற ஆலயங்களாகும்.   

மற்ற நவக்கிரகங்களின் தரிசனத்திற்கு

ஏனைய எட்டு நவக்கிரக தலங்களும் சூரியனார்  கோவிலுக்கு அண்மையிலேயே அமையப்பெற்றுள்ளன. அவை திருநள்ளாறு (சனி  ), கஞ்சனூர் (சுக்கிரன்  ), ஆலங்குடி (குரு ), திருவெண்காடு (புதன் ), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருநாகேஸ்வரம் (ராகு ), கீழ்பெரும்பள்ளம் (கேது ) , மற்றும் திங்களூர் (சந்திரன் ).

சூரியனார் கோயிலை எப்படி அடைவது?

சூரியனார் கோவில் கும்பகோணத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலும் , சுவாமி மலையில் இருந்து 21 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அதோடு ஆடுதுறை ரயில் நிலையம் வெகு அருகாமையிலேயே அமைந்திருப்பதால் சூரியனார் கோயிலை அடைவது எளிதான காரியமே.

சூரியனார் கோவில் சிறப்பு

சூரியனார் கோவில் வானிலை

சிறந்த காலநிலை சூரியனார் கோவில்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சூரியனார் கோவில்

  • சாலை வழியாக
    சூரியனார் கோவிலை அடைய திருமங்கலக்குடி பேருந்து நிலையத்தில் இறங்கி கிழக்கு நோக்கி 1320 அடி நடந்து செல்லவும். ஆடுதுறை, ஆணைகரையில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஆடுதுறை ரயில் நிலையம் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ளது. மயிலாடுதுறையும் கும்பகோணமும் ஆடுதுறைக்கு அருகில் உள்ள நகரங்கள் ஆகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சூரியனார் கோவில் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது, இது கும்பகோணத்தில் இருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அருகாமையில் தஞ்சாவூரில் இருந்து 58கிமீ தொலைவில், திருச்சி விமான நிலையம் அமையப்பெற்றிருக்கிறது. திருச்சிராப்பள்ளி வழக்கமான விமானங்களின் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு விமான நிலையமும் சென்னை விமான நிலையமும் இதன் அருகில் உள்ளது, இவை இந்தியாவின் மற்ற நகரங்களுடனும் வெளிநாட்டு நகரங்களுடனும் இணையப்பெற்றுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed