அக்னிகார்ஹ் காணாத தேஜ்பூர் சுற்றுலா முழுமைபெறாது என சொல்லப்படுகிறது. இளவரசர் அனிருதாவிற்கும் இளவரசி உஷாவிற்குமான காதலையும், அதனால் கிருஷ்ணருக்கும் பானாசுரருக்கும் நடந்த போரையும் இவ்விடம் எடுத்துரைக்கிறது.
அக்னிகார்ஹின் கோட்டையைச் சுற்றிலும் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் மூலம் முழுக்கதையும் சொல்லப்பட்டிருக்கிறது.
உயர்ந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ்விடத்தை அடைய சுற்றுப்பாதை படிகள் உள்ளன. உஷாவின் தோழியான சித்ரலேகா தன் கனவில் கண்ட ஆணை வரைந்து உஷாவிடம் காட்ட அதில் இருந்தவரின் உருவம் உஷாவின் காதலனைப் போலவே இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
அக்னிகார்ஹின் உச்சியில் இருந்து மொத்த நகரத்தையும் காணமுடிவதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் இடமாக அக்னிகார்ஹ் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications