சிவபெருமானுக்காக 11ம் நூற்றாண்டில் இந்த அம்பரேஷ்வர் கோயில் கட்டப்பட்டுள்ளது. தானேயிலிருந்து 26 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அம்பர்நாத் நகரத்தில் இந்த கோயில் உள்ளது. அம்பர்நாத் என்ற பெயருக்கு ஆகாயக்கடவுள் என்பது பொருளாகும்.
சிலாஹர் வம்ச மன்னரான மஹாமண்டலேஸ்வரால் 1060 ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த புராதனமான கோயில் வாதுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு பாறைக்குன்றின் சரிவில் எழுப்ப ப்பட்டுள்ளது.
வெகு நுட்பமான சிற்பக்குடைவு வேலைப்பாடுகளைக்கொண்டுள்ள இந்த கோயில் ஹேமந்த்பந்தி கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. பெரும்பாலும் இது சுண்ணாம்பு மற்றும் கருங்கற்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் பிரகார முற்றத்துக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில் பிரதான வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான வாயிலான மேற்கு வாசலில் ஒரு ந்ந்தி சிலை காணப்படுகிறது.
கோயில் தூண் சுவற்றில் சிவபெருமான், கணபதி, நந்தி போன்ற சிற்பங்கள் கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.இந்த கோயிலில் பிரசித்தி பெற்ற திருவிழாவாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமான இந்த கோயில் வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களையும் யாத்ரீகர்களையும் ஈர்க்கிறது.இந்த கோயில் தற்சமயம் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.



Click it and Unblock the Notifications