Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தானே » ஈர்க்கும் இடங்கள் » பசைன் கோட்டை

பசைன் கோட்டை, தானே

41

தானே மாவட்டத்தில் வஸாய் மாவட்ட த்தில் இந்த பஸைன் கோட்டை அமைந்துள்ளது. இது தற்சயம் வஸாய் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. தானே ஓடையை ஒட்டி அமைந்த போர்த்துகீசிய குடியிருப்பாக இது ஆரம்ப காலத்தில் விளங்கியது. அப்போது இந்த கோட்டை  ‘ஃபோர்ட் ஆஃப் செயிண்ட் செபாஸ்டியன் ஆஃப் வஸாய்’ என்று அழைக்கப்பட்டது.

ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோட்டையான இது குஜராத் சுல்தான் பஹதூர் ஷா’வால் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை அக்காலத்தில் போர்த்துக்கிசியர்களால் எழுப்பப் பட்டிருந்தாலும் இந்திய அரசரின் கட்டுப்பாட்டின் கீழேயே அச்சமயம் இது இருந்துள்ளது. பின்னர் மராத்தியர்கள் 1739 ஆண்டில் இந்த கோட்டையை கையகப் படுத்தினர்.

இந்த பஸைன் கோட்டையானது ஒட்டுமொத்த பஸைன்  பிரதேசத்துக்கும் காவல் அரணாக திகழ்ந்திருக்கின்றது. 58000 கிறித்துவ மக்களுக்கும், 60000 இந்திய மக்களுக்கும் 2000 போர்த்துகீசிய மக்களுக்கும் இது அரணாக விளங்கியிருக்கிறது.

ஒரு சோகமான விஷயம் இந்த சரித்திர புகழ்பெற்ற கோட்டை தற்சமயம் சிதிலமடைந்து இடிபாடுகளுடன் காணப்படுவதுதான்.  இருப்பினும் இதன் பிரம்மாண்டமான கோட்டைச்சுவர்கள் 4.5 கி.மீ நீளத்துக்கு இன்றும் கம்பீரமாக நிற்கின்றன. ‘போர்ட்டா டா டேர்ரா’ மற்றும் ‘போர்ட்டா டா மார்’ என்ற இரண்டு கதவுகள் போர்த்துகீசிய சர்ச்சுகள் மற்றும் கட்டிடங்களின் மிச்சமாக காட்சியளிக்கின்றன.

இந்த கோட்டையின் வாயில்கள் மிக அற்புதமான கலை அம்சத்துடன் பல அலங்கார வேலைப்பாடுகள் குறிப்புகளுடன் காணப்படுகின்றன. அவற்றுக்கு அருகிலேயே 1558 ம் ஆண்டைச் சேர்ந்த போர்த்துகீசிய கல்லறைகள் காணப்படுகின்றன.

கோட்டையை சுற்றி சூழ்ந்துள்ள பிரதேசம் மிகுந்த இயற்கை எழிலுடன் மூன்று புறமும் கடல் சூழ காட்சியளிக்கின்றது. பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்களால் படப்பிடிப்புக்கு மிகவும் விரும்பப்படும் இடமாக இது விளங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City