தானே மாவட்டத்தில் குறிப்பிடத் தக்க சுற்றுலா ஸ்தலங்களில் பிவாண்டியும் ஒன்று. இது தானே நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில், மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இந்த இடம் இங்குள்ள நெசவு தொழிற்சாலைகளுக்கும், கார்பெட், பட்டுத்துணி, கைத்தறி போன்ற பிரத்யேக படைப்புகளுக்கு பெயர் பெற்றுள்ளது.
கொங்கண பிரதேசத்தின் கரையோரப்பகுதியில் அமைந்துள்ள பிவாண்டி சுற்றிலும் உயரமான மலைகள் சூழ காணப்படுகிறது. வரளா தேவி ஏரி மற்றும் வெந்நீர் ஊற்றுகள், 800 வருடங்கள் பழமையான ஒரு கோயில் போன்றவை இங்கு குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications