தானே மாவட்ட த்தில் அமைந்துள்ள இரட்டைக் கிராமங்கள் இந்த காஷி-மீரா ஆகும். சுற்றிலும் இயற்கை எழில் கொண்ட மலைகள் சூழ இரு புறமும் பல ஏரிகளுடன் இந்த இரட்டைக்கிராமங்கள் காட்சியளிக்கின்றன.
பிரசித்தி பெற்ற இந்த சிற்றுலா ஸ்தலத்தை தானே மையப்பகுதியிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் சாலை மூலம் அடையலாம். இருபுறமும் அழகான ஏரிகளும் உயரமான மலைகளும் சூழ அமைந்திருக்கும் இந்த சாலையில் பயணிப்பதே ஒரு அற்புத அனுபவமாகும்.
மும்பைப் பகுதியில் தஹிசார் எனும் சிறிய ரயில் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து காஷி-மீரா கிராமங்களுக்கு வரலாம். தேசிய நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடி ஒன்று இந்த தஹிசார் எனும் இடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கிய நெடுஞ்சாலை மும்பையை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாகும்.
காஷி – மீரா என்ற இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையில் அமைந்துள்ள செயிண்ட் ஜெரோம் சர்ச் ஒரு காலத்தில் இந்த இரண்டு கிராமங்களையும் பிரிப்பது போல் அமைந்திருந்தது. 1595 ல் கட்டப்பட்டுள்ள இந்த கிறித்துவ தேவாலயம் 400 ஆண்டு பழமையுடன் காணப்படுவதுடன் மூன்று முறை புதுப்பிக்கப்பட்டும் உள்ளது.வருடாவருடம் டிசம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் இந்த இரண்டு கிராமங்களும் ஒரு பெரிய ஊர்த்திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகின்றன.



Click it and Unblock the Notifications