தானேவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மிகவும் விரும்பும் ஒரு பொழுதுபோக்கு இடம் இந்த கெல்வா கடற்கரை ஆகும். ஒட்டு மொத்த மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மிகப்பெரிய கடற்கரை இந்த கெல்வா கடற்கரை ஆகும். அரபிக்கடலை ஒட்டி 7 கி.மீ நீளத்துக்கு இந்த கடற்கரை காணப்படுகிறது.
கெல்வா கடற்கரையை ஒட்டி வரிசையாக சுரு மரங்கள் அமைந்துள்ளன. இங்கு சீதளாதேவி கோயில் ஒன்றும் உள்ளது. தானே பகுதியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் மற்றும் இயற்கை எழில் சார்ந்த அம்சம் இந்த கெல்வா கடற்கரை ஆகும்.



Click it and Unblock the Notifications