மசுண்டா தாலவ் அல்லது தாலவ் பாலி (தாலவ் என்றால் ஏரி என்பது பொருள்) என்று அழைக்கப்படும் இந்த ஏரி தானே மாவட்ட த்தில் மிகப்பெரிய, பிரசித்தமான ஏரியாகும். தானே நகர மையத்திலிருந்து 20 அல்லது 30 நிமிட தூரத்தில் இருக்கும் இந்த ஏரி தானே பிரதேசத்தின் மற்ற ஏரிகளை விட தனிச்சிறப்பை பெற்றுள்ளது.
மஹாரஷ்டிரா மாநிலத்தின் அழகான ஏரிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த ஏரியில் படகுச்சவாரி, வாட்டர் ஸ்கூட்டர் சவாரி போன்ற பொழுது போக்கு அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளுக்காகவெ உள்ளன.
உள்ளுர் உணவை ருசித்துப்பார்க்க வசதியாக இந்த ஏரியை ஒட்டி பல உணவகங்களும் உள்ளன. பொதுவாக வாரக்கடைசியில் அலுப்பை போக்கி உற்சாகபடுத்திக்கொள்ளவும் பொழுது போக்கு உல்லாசங்களில் ஈடுபடவும் மக்கள் குடும்பத்துடன் இங்கு கூடுகின்றனர்.
தானே பகுதியிலேயே மிகப்பழமையான கோபினேஷ்வர் கோயில் இங்கு மசுண்டா ஏரியின் கரையில் அமைந்துள்ளது.இந்தக்கோயில் தன் பிறப்பை 810 மற்றும் 1240 ம் ஆண்டில் சில்ஹர வம்ச அரசர்களின் காலத்தில் கொண்டுள்ளது.
அதற்கு பிந்தைய வரலாற்று காலத்தில் பேஷ்வாக்களின் ஆட்சியில் 1760 ம் ஆண்டு சர்சுபேதார் ராமாஜி மஹாதேவ் பிவால்கரால் கட்டப்பட்டு அவருக்குப்பின் பேஷ்வா சிம்மாஜி அப்பா என்பவரால் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பழமையான கலை அம்சங்களை கொண்டுள்ள இந்தக்கோயில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.



Click it and Unblock the Notifications