தானே மாவட்டத்தில் மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் இந்த நானேகாட் மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் கடல் மட்டத்திலிருந்து 838.2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.
இந்த மலைகளுக்கிடையே மிகப்புராதனமான கணவாய் வழி ஒன்று உள்ளது. இது காட்மாதாவையும் கொங்கண் பிரதேசத்தையும் இணைக்கிறது. இந்த கணவாய் பகுதியில் பல குகைக்குடைவுகளும் பாறைத்தடாகங்களும் காணப்படுகின்றன.
இந்த குகைகளில் பிராம்மி மொழியில் காணப்படும் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும்.
நானச்ச அங்கதா என்ற உயரமான சிகரம் நானேகாட் மலைகளில் அமைந்துள்ளது. இது ‘மலையேறி’களுக்கும் பாறை ஏற்றம் செய்வோருக்கும் மிகப்பிடித்தமான ஒரு ஸ்தலமாகும்.



Click it and Unblock the Notifications