தானே மாவட்டத்தில் ஒரு முக்கியமான அடையாளச்சின்னமாக செயிண்ட் ஜான் தி பாப்டிஸ்ட் சர்ச் விளங்குகிறது. தானே ரயில் நிலையத்துக்கருகில் மசுண்டா ஏரிக்கு பக்கத்தில் இது உள்ளது.
இந்த பாப்டிஸ்ட் சர்ச் முதலில் செயிண்ட் அந்தோணி சர்ச் என்று அழைக்கப்பட்டது. இது 1852ம் ஆண்டு ஃபாதர் அந்தானியோ டோ போர்ட்டோ மேற்பார்வையில் ‘ப்ரான்சிஸ்கன்ஸ்’ எனப்பட்ட போர்த்துகீசிய பாதிரியார்களால் கட்டப்பட்டது.
1937ல் மராத்தா வம்சத்தால் தானே பகுதி கைப்பற்றப் பட்டபோது இங்கிருந்த எல்லா சர்ச்சுகளும் இடிக்கப்பட்டன. ஆனால் இந்த செயிண்ட் அந்தோணி சர்ச் மட்டும் இடிக்கப்படவில்லை என்பது குறிப்பிட த்தக்கது. இக்காலத்தில் தான் இந்த சர்ச்சின் பெயர் செயிண்ட் ஜான் தி பாப்டிஸ்ட் சர்ச் என்பதாக மாற்றப்பட்டது.
காலப்போக்கில் இந்த பிரான்சிஸ்கன் தேவாலயத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. இதன் கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக பல புதுப்பிப்பு வேலைகள் செய்யப்பட்டன. இருப்பினும் இதன் பழமையான மரப்பீடம் இன்றும் உள்ளது.
சர்ச் உறுப்பினர்கள் மற்றும் பாதிரியார்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்த தால் தேவாலயத்தின் முகப்புப் பகுதி 1965ம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது.



Click it and Unblock the Notifications