320 கி.மீ சதுர கி.மீ பரப்பளவில் காணப்படும் தான்சா வனவிலங்கு சரணாலயம் வாடா, மோக்கதாஸ் மற்று ஷாஹாபூர் போன்ற மூன்று தாலுக்காக்களில் பரவியுள்ளது. இது தானே மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.
இந்த சரணாலயம் எந்த ஒரு இயற்கை மற்றும் காட்டுயிர் ரசிகரையும் மகிழ்ச்சியூட்டக் கூடியது. இதில் பல்வேறு வகைகளைச்சேர்ந்த அரிய தாவரங்களும், விலங்கினங்களும் காணப்படுகின்றன. 200 வகையான பறவைகளும் 50 வகையான விலங்குகளும் இங்கு உள்ளன.
சாம்பார் மான், கழுதைப்புலி, எலி மான் , சிறுத்தைப்புலி, குரைக்கும் மான், கருஞ்சிறுத்தை, காட்டுப்பன்றி, நரிகள் மற்றும் புலி போன்றவை இந்த சரணாலயத்தில் உள்ளன. மேலும் கடம்ப மரம், ஓலிவ் மரம், கருங்காலி மரம், புளிய மரம், தேக்கு மற்றும் காட்டு மூங்கில் போன்ற பல்வகை மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
இந்த சரணாலயத்துக்கு அருகில் உள்ள சூர்யமால் பகுதியில் பல தங்குமிட வசதிகள் உள்ளன. இருப்பினும் முன்பே பதிவு செய்து கொண்டு இங்கு வருவது நல்லது.
தான்சா ஏரியும் மஹாதேவ் கோயிலும் இங்கு அருகிலுள்ள இதர சுற்றுலா அம்சங்களாகும். நவம்பரிலிருந்து மே மாதம் வரையிலான காலம் இங்கு விஜயம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.



Click it and Unblock the Notifications