மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயமாக இந்த தானே ஓடைப்பகுதி அறியப்படுகிறது.205 வகையான பறவைகளுக்கான வாழ்விடமாக இது உள்ளது.
மிக அரிதான சில பறவை இனங்களான தங்கப்புறா, சீழ்க்கை வாத்து, விசிறிக்கொண்டை, பழுப்புப்புறா, கோணமூக்கு உள்ளான் போன்றவையும், சாதாரணமாக நீர்ப்பிரதேசங்களில் வாழும் உள்ளான், வெள்ளை கொக்கு, பூ நாரை, கால் திருப்பி உள்ளான் போன்ற பறவை இனங்களும் இங்கு காணப்படுகின்றன.
தானே ஓடை என்பது தானே மாவட்டத்தில் உள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்திய பறவை பாதுகாப்புத்துறை இந்த ஓடையின் பராமரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளது.



Click it and Unblock the Notifications