Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தானே » ஈர்க்கும் இடங்கள் » டிக்குஜி-னி-வாடி

டிக்குஜி-னி-வாடி, தானே

41

தானே மாவட்டத்தில் மண்படா சிட்டல்ஸார் கிராமத்தில் உயர்ந்த மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளுக்கிடையில் அமைந்துள்ளது இந்த ‘டிக்குஜி-னி-வாடி’ என்ற அமியூஸ்மெண்ட் பார்க்.இந்த இடம் மும்பை மாநரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் கோட்பந்தர் – தானே சாலையில்  உள்ளது. இந்த பொழுதுபோக்கு மையம் 1983ம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உல்லாசப்பூங்கா ஒட்டுமொத்தமாக 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதன் உள்ளே ஒரு வாட்டர் பார்க், ஒரு அம்யூஸ்மெண்ட் பார்க், மற்றும் ஒரு ரிசார்ட் விடுதி போன்றவை உள்ளன.

இங்குள்ள ஓசன் பார்க்கில் பிரம்மாண்டமான பூங்கா அமைப்புடன் கூடிய ராட்சத நீர்ச்சறுக்கு அமைப்புகள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்க்கான சிறிய சறுக்கு அமைப்புகள், லேஸி ரிவர் எனப்படும் நீர் விளையாட்டு அமைப்பு மற்றும் அக்வா ப்ளே ஷாப் போன்றவை காணப்படுகின்றன.

அதே போன்று அம்யூஸ்மெண்ட் பார்க்கில் ஜயண்ட் வீல்ஸ், கோ-கார்ட், பம்பர் கார், ஸ்பேஸ் ஷிப், ஜுனியர் வோர்ம், விர்ல்விண்ட் சேர்’ஸ், ஃபன்னி பன்னி, பம்பிங் போட்’ஸ், UFO சைக்கிள் மற்றும் கோஸ்டர் போன்ற சாகச பொழுது போக்கு விளையாட்டு சாதன ங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள வாட்டர் பார்க் எல்லா நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுகிறது. அம்யூஸ்மெண்ட் பார்க் ஒரு மணி நேரம் தாமதமாக திறந்து அதே போல் ஒரு மணி நேரம் தாமதமாக மூடப்படுகிறது. ரிசார்ட் பகுதி காலை 9 மணிக்கு திறந்து மாலை 7 மணிக்கு மூடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed

Near by City