இந்த மஹாகணேஷ் கோயில் தானே மாவட்ட த்தில் தித்வாலா கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு சித்திவிநாயகராக கணபதிக் கடவுள் குடி கொண்டிருப்பதால் இது சித்திவிநாயக் மஹாகணபதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு தொடர்ந்து மனமுருகி வேண்டிக்கொண்டால் பக்தர்கள் அவர்கள் விரும்பும் வாழ்க்கைத்துணையை அடையலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்த கணபதி கோயிலின் உள்ளே சிவசங்கர தெய்வத்துக்கான சிறிய கோயிலும், விட்டல்-ருக்மணி கோயிலும் உள்ளது
கணேஷ் சதுர்த்தி மற்றும் அங்கரீக சதுர்த்தி போன்ற தினங்களில் இந்த கோயில் அலங்காரமாக காணப்படுகிறது. அச்சமயம் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று கணபதி தெய்வத்தை வணங்கி செல்கின்றனர்.
கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு சிறிய குளம் ஒன்றும் அதை சுற்றி ஒரு நந்தவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு படகுச்சவாரியும் உண்டு.



Click it and Unblock the Notifications