Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேக்கடி » ஈர்க்கும் இடங்கள் » ஆப்ரகாம்’ஸ் ஸ்பைஸ் கார்டன்

ஆப்ரகாம்’ஸ் ஸ்பைஸ் கார்டன், தேக்கடி

24

தேக்கடியிலிருந்து கோட்டயம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த ஆப்ரகாம்’ஸ் ஸ்பைஸ் கார்டன் நறுமணம் கமழும் வாசனைப்பயிர்கள் விளையும் தோட்டப்பண்ணையாகும்.

பலவகை வாசனைப் பயிர்களின் மருத்துவ குணங்கள், பயிர் செய்யும் முறைகள், ஆயுர்வேத குறிப்புகள் என்று ஏராளமான தகவல்களை பயணிகள் இந்த தோட்டத்தில் தெரிந்துகொள்ளலாம்.

வாசனைப்பயிர்கள் மட்டுமன்றி மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள், பழங்கள், மலர்கள் போன்றவையும் இந்த தோட்டத்தில் காணப்படுகின்றன. வாசனைப்பொருட்களின் உற்பத்தியின் பல்வேறு நிலைகளான விளைச்சல், அறுவடை, தரம் பிரித்தல் பதப்படுத்துதல் போன்ற நடைமுறைகள் குறித்த நுட்பமான தகவல்களையும் பார்வையாளர்கள் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

1952ம் ஆண்டில் ஆபிரகாம் என்பவரால் துவங்கப்பட்டுள்ள இந்த தோட்டப்பண்ணையில் சுற்றுலாப்பயணிகளுக்காகவே வழிகாட்டியுடன் கூடிய காட்சி விளக்க சிற்றுலா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு விசேஷமாகும்.

மலையாளத்தில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, ஃபிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழியிலும் இந்த காட்சி விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. ஆபிரகாம் வாசனைப்பயிர் தோட்டப்பண்ணையில் குறைந்தபட்சமாக 200 ரூபாய் நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

மேலும், இங்குள்ள வேளாண் நிபுணர்கள் மற்றும் தோட்டப்பயிர் விவசாயிகளுடன் கலந்துரையாடலிலும் பயணிகள் ஈடுபடலாம். எனவே, இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டப்பயிர்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பண்ணை மிகவும் பிடித்த இடமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. விதைகள் மற்றும் வாசனைப் பொருட்களையும் பயணிகள் இங்கிருந்து வாங்கிச் செல்லலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Sep,Fri
Return On
19 Sep,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Sep,Fri
Check Out
19 Sep,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Sep,Fri
Return On
19 Sep,Sat

Near by City