மாவூத்து, தேனியிலிருந்து 93 கிமீ மற்றும் ஆண்டிபட்டியில் இருந்து 78 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமாகும். வருசநாடு மலைப்பகுதிகளில் உள்ள வேலப்பர் கோவிலுக்காக புகழ் பெற்ற இடமாக மாவூத்து விளங்குகிறது.
விநாயகப் பெருமானுக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் சப்த கன்னிகைகள் என்ற ஏழு கன்னியரின் வழிபாட்டு தலமும் உள்ளது. இதனைக் கட்டியவர் கண்டமனூர் ஜமீன்தார் என்பவராவார்.
இந்த கோவிலிற்குள் இருக்கும் நீர்ச்சுனையின், தண்ணீருக்கு நோய்கள் மற்றும் வலிகளைத் தீர்க்கும் வல்லமை உள்ளதாக நம்பப்படுகிறது. மாவூத்து என்றால் தமிழ் மொழியில் 'மாம்பழ ஊற்று' என்று பொருளாகும்.
மழைக்காலங்களில் பெருமளவு மழையைப் பெறும் இந்த இடம், அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான மாமாரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவி வருகிறது. எனவே தான் மாவூத்து என்ற பெயரை இந்த இடம் பெற்றுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் குடி கொண்டுள்ள, இந்த இயற்கைப் பசுமையான சுற்றுலாத்தலத்திற்கு வருவது நல்ல அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications