18-ம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளையுடைய மிகவும் புகழ் பெற்ற இடம் சுருளி நீர்வீழ்ச்சியாகும். 150 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக இந்த அருவி விழுந்து கொண்டிருக்கிறது.
மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி நீர்வீழ்ச்சி முதலில் ஒரு குட்டையில் தேங்கி அதனை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு விழுகிறது. தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்த அருவியின் சிறப்பையும், வனப்பையும் பற்றி இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
இந்த அருவிக்கு அருகில் உள்ள இடம் மூலிகைகளின் இருப்பிடமாகும். சுருளி நீர்வீழ்சியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சுருளி வேலப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாடு சுற்றுலாத் துறையினரால் திருவிழா ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
தேனிக்கு வருபவர்கள் காண வேண்டிய முதன்மையான சுற்றுலாத் தலம் இந்த நீர்வீழ்ச்சியாகும். மழைக்காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருவார்கள. உடை மாற்றும் அறைகளும், ஷவர்களும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications