சாலை பஜார் திருவனந்தபுரத்திலுள்ள முக்கியமான மார்க்கெட் பகுதிகளில் ஒன்றாகும். இது கிள்ளிப்பாலம் துவங்கி ஈஸ்ட் ஃபோர்ட் வரையான 2 கி.மீ தூரத்தை உள்ளடக்கியுள்ளது.
இந்த குறுகலான சாலையின் இருபுறமும் வரிசையாக கடைகள் காணப்படுகின்றன. தின்பண்டங்கள், மலர்கள், தேங்காய் எண்ணெய், பெயிண்ட் பொருட்கள் என்று கதம்பமான வாசனைகளை பயணிகள் இந்த மார்க்கெட் சந்தில் அனுபவிக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் 8 மணி வரை இங்குள்ள கடைகள் திறக்கப்படுகின்றன. பழங்கள் முதல் தங்க ஆபரணங்கள், ஃபர்னிச்சர்கள், இரும்புப்பொருட்கள் வரை எல்லாப்பொருட்களும் இங்கு கிடைக்கின்றன.
குடும்பத்திற்காகவும் நண்பர்களுக்காகவும் சில ஞாபகார்த்தப்பொருட்களை இங்கு வாங்கலாம். சாலை தெருவுக்கு விஜயம் செய்யாமல் திருவனந்தபுரம் சுற்றுலா நிறைவடைவதில்லை என்பதே உண்மை.



Click it and Unblock the Notifications