Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவனந்தபுரம் » ஈர்க்கும் இடங்கள் » வனவிலங்கு பூங்கா

வனவிலங்கு பூங்கா, திருவனந்தபுரம்

28

திருவனந்தபுரத்திலுள்ள வனவிலங்கு பூங்கா இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். இது திருவாங்கூர் ராஜாவால் 1857ம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இங்குள்ள வனவிலங்கு காட்சிக்கூடத்தில் 75 வகையான பறவைகள் மற்றும் விலங்குகள் காட்சிக்கு உள்ளன. இந்திய உயிரினங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை இவற்றில் அடங்குகின்றன.

குழந்தைகள் பெரியவர்கள் என்ற பேதம் இல்லாமல் இங்குள்ள உயிரினங்கள் பார்வையாளர்களை கவர்கின்றன. இந்திய காண்டாமிருகம், மணிப்பூர் மான், ஆசிய சிங்கம், வரையாடு, நீலகிரி லாங்குர் குரங்கு, வங்காள பெரும்புலி, குல்லாய் எருமை, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை மற்றும் நீர் யானை போன்றவை இங்குள்ள விலங்குகளில் குறிப்பிடத்தக்கவை. பல அழிந்து வரும் உயிரினங்கள் இங்கு இயற்கையான சூழலில் நடமாடுவதைக்காணும் அனுபவம் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.

55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வனவிலங்கு பூங்கா புல்வெளிகள், ஏரிப்பகுதி மற்றும் வனப்பகுதி போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இங்குள்ள ஏரியில் படகுச்சவாரியும் செல்லலாம். பிக்னிக் சிற்றுலா செல்லவும் பள்ளிக்குழந்தைகள் கல்விச்சுற்றுலா செல்லவும் ஏற்ற இடமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Sep,Thu
Return On
18 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Sep,Thu
Check Out
18 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Sep,Thu
Return On
18 Sep,Fri