Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவனந்தபுரம் » ஈர்க்கும் இடங்கள் » கரமனா ஆறு

கரமனா ஆறு, திருவனந்தபுரம்

28

அகஸ்தியர்கூட மலையில் உற்பத்தியாகும் கரமனா ஆறு திருவனந்தபுரம் வழியாக ஓடுகிறது. இந்த மலை மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தென்கோடியில் உள்ள மலைகளாகும்.

68 கி.மீ நீளத்துக்கு மேற்கு நோக்கி பயணம் செய்யும் இந்த கரமனா ஆறு கோவளம் அருகில் பனத்துறா எனும் இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியான கரமனா என்ற இடத்தை வளைத்துக்கொண்டு செல்வதால் அப்பெயரிலேயே இந்த ஆறு அழைக்கப்படுகிறது.

மற்ற ஆறுகளைப்போன்று அவ்வளவாக நீளம் இல்லாத இந்த கரமனா ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. பெப்பாரா அணை மற்றும் அருவிக்கரா அணை என்று அழைக்கப்படும் இவை வெவ்வேறு நோக்கங்களுக்காக கட்டப்பட்டுள்ளன.

ஆற்றின் மேற்பகுதியில் உள்ள பெப்பாரா அணை பாசன வசதிகளுக்காகவே கட்டப்பட்டுள்ளது. அருவிக்கரா அணையானது திருவனந்தபுரம் நகரத்தின் குடிநீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டுள்ளதோடு நீர்ப்பாசன தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கரமனா ஆற்றின் மீது பல அழகிய பாலங்கள் கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.கரமனா ஆற்றின் கரைமீது நடந்தபடியே இயற்கை காட்சிகளை ரசிப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Sep,Thu
Return On
18 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Sep,Thu
Check Out
18 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Sep,Thu
Return On
18 Sep,Fri