அப்பன் தம்புரான் ஸ்மாரகம் என்று அழைக்கப்படும் இந்த நினைவகத்தை ஒரு பாரம்பரிய அருங்காட்சியகம் என்றும் சொல்லலாம். திரிசூரை உருவாக்கிய ராமவர்ம அப்பன் தம்புரான் என்பவருக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இவர் தனது வலிமையான நிர்வாகத்திறனுக்காக சக்தன் தம்புரான் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளார். அவரது பாரம்பரிய பெருமையை கொண்டாடும் விதத்தில் 1976ம் ஆண்டு சாகித்திய அகாடமியானது அய்யன் தோலே எனும் இடத்தில் இந்த ‘அப்பன் தம்புரான் ஸ்மாரகம்’ எனும் நினைவகத்தை நிறுவி பராமரித்து வருகிறது.
இங்கு அப்பன் தம்புரான் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் பற்றிய எண்ணற்ற நூல்கள், பத்திரிகைகள், ஆவணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கேரளாவின் காலனிய காலம் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய வரலாற்றுப் பாரம்பரியம் குறித்த நூல்களை வாசித்தபடியே ஒரு மதிய நேரத்தை இங்கு கழிக்கலாம். திரிசூருக்கு மிக அருகிலேயே உள்ள இந்த அய்யன் தோலே எனும் இடத்தை எளிதாக சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications